பழனிக்கோயில் ஒன்றாம் எண் வின்ச் பராமரிப்புப் பணிக்காக லாரி மூலம் கரூர் கொண்டு செல்லப்பட்டது.
பழனிக்கோயிலுக்கு மலை உச்சிக்கு செல்ல படிவழிக்கு மாற்றாக ரோப்காருக்கு முன்னதாக வின்ச் பாதை அமைக்கப்பட்டது. இந்த வின்ச் மூன்று பாதைகளில் இயக்கப்படுகிறது.


பழனிக்கோயிலுக்கு மலை உச்சிக்கு செல்ல படிவழிக்கு மாற்றாக ரோப்காருக்கு முன்னதாக வின்ச் பாதை அமைக்கப்பட்டது. இந்த வின்ச் மூன்று பாதைகளில் இயக்கப்படுகிறது.
இதில் இரண்டாம் எண் வின்ச் இயந்திரம் முழுக்க, முழுக்க ஜப்பான் நாட்டு இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. மற்ற இரண்டும் இந்திய தயாரிப்பு இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. ரயில்பெட்டி போல இரு பெட்டிகளில் பெட்டிக்கு 16 முதல் 20 பேர் வரையில் என இரு பெட்டிக்கு 32 முதல் 40 பேர் வரை பயணம் செய்யமுடியும். எட்டுநிமிட நேரத்தில் மலை உச்சியை அடையும் இந்த வின்ச்சில் பயணம் செய்ய பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
இதற்கான கட்டணமாக ரூ.10 பெரியவர்களுக்கும், ரூ.5 சிறியவர்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. சிறப்புக்கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கப்படுகிறது. மூன்று வின்ச்களும் பொறியியல் வல்லுனர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவற்றை மலை உச்சிக்கு இழுத்து செல்லும் வடக்கயிறுகள் அவ்வபோது ஆய்வு செய்யப்பட்டு காலங்களில் மாற்றப்படுகிறது.
மேலும் பெட்டிகளின் இரும்பு பாகங்கள் பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானிகளால் கதிர்வீச்சு மூலமும் சோதனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் எண் வின்ச்சுகள் தனியார் கட்டுமான நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சிலதினம் முன் ஒன்றாம் எண் வின்ச் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது.
வின்ச்சின் இருக்கைகள், பெயிண்ட் என அனைத்து வேலைகளும் மேற்கொள்ள இருந்ததால் நிலையில் இந்த வின்ச்சின் பெட்டிகள் தனித்தனியே கழற்றப்பட்டு கிரேன் மூலம் இரு லாரிகளில் ஏற்றி கரூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்த பின் மீண்டும் பழனி கொண்டு வந்து பாதையில் இணைக்கப்படும்.
இதற்கு சுமார் ஒருவார காலமாகும் என தெரியவருகிறது. பெட்டிகள் வந்த பின் வடக்கயிறுகள் பிளைசிங் செய்யப்படும். தண்டவாளத்தில் செல்லும் பெட்டிகள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதை ஏராளமான பக்தர்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...