வைகுண்ட ஏகாதசி அன்று தங்கரதத்தில் வலம் வந்த மலையப்பஸ்வாமி

திருமலை ஏழுமலையானுக்கு மிகு உகந்த நாள் சனிக்கிழமை, மிக உகந்த திதி ஏகாதசி. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி முன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம். அந்த ஏகாதசியும்.  சனிக்கிழமை அன்று
Updated on
1 min read

திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று மலையப்பஸ்வாமி தங்கரதத்தில் வலம் வந்தார்.  திருமலை ஏழுமலையானுக்கு மிகு உகந்த நாள் சனிக்கிழமை, மிக உகந்த திதி ஏகாதசி. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி முன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம். அந்த ஏகாதசியும்.  சனிக்கிழமை அன்று வந்ததையொட்டி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வெள்ளிக்கிழமை இரவே சுமார் 2 லட்சம் பக்தர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். அதனால் வைகுண்டம் க்யூ காம்பளக்ஸ்கள் அனைத்தும் நிரம்பி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஏழுமலையானை தரிசிக்க சுமார் 18 மணிநேரம் காத்திருந்தனர்.

    தேவஸ்தானம் அறிவித்தது போல் சனிக்கிழமை காலை 7 மணிக்கு விஐபி தரிசனத்தை முடித்து தர்ம தரிசனமும், நடைபாதை பக்தர்கள் தரிசனமும் தொடங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்பஸ்வாமி தன் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி மற்றம் பூதேவியுடன், தங்க ரதத்தில் நான்கு மாட வீதியில் உலா வந்தார். இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். மேலும் துவாதசியான ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணிக்கு திருமலையில் உள்ள திருகுளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

      திருமலையை போல் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாணவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் அப்பளாயகுண்ட ஆகிய கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மேலும் நடைபாதை பக்தர்களுக்கு இலவச லட்டும்,திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளான ஸ்ரீநிவாசம், விஷ்ணுநிவாசம், மாதவத்தில் இலவச மதிய உணவு வழங்குவது தொடங்கப்பட்டது.

  திருமலைக்கு வந்த பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் முதலியவற்றை வரிசையில், காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கியது. இந்த இரண்டு நாட்களும் திருமலையில் 1000 போலீசாரும், 1,500 விஜிலென்ஸ் ஊழியர்களும், 600 ஸ்காவுட்ஸ் ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com