விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் தைப்பூசத் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிப்பு

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாகவும், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகவும் திகழும்  பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை

News image
Updated On :17 ஜனவரி 2014, 3:13 pm

என்.​ அங்​கு​பாபு

தமிழகத்தின் முதன்மைக் கோயிலாகவும், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகவும் திகழும்  பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் முக்கிய உற்சவமாக தைப்பூசத் திருவிழா திகழ்கிறது.  இத்திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்பத்தில் கடந்த சனிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் விழாவில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, தந்தசப்பரம், புதுச்சேரி சப்பரம் உள்ளிட்ட பலவாகனங்களில் இரதவீதி உலா எழுந்தருளினார். 

மலைக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால், இளநீர், கரும்பு காவடி, காலணிகாவடி எடுத்து வந்தும், சேவல்களை நேர்ச்சை செலுத்தியும் வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பலஅடி நீள அலகு குத்தி வந்திருந்தனர்.  வெள்ளிக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலைக்கோயில் பாரவேல் மண்டபம் உள்ளிட்ட பல இடத்தில் பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் மலர்ப்பந்தல், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  பக்தர்கள் பாதுகாப்புக்காக சுமார் 3ஆயிரம் போலீசாரும்,  ஊர்க்காவல்படையினரும், கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைக்கோயில் படிவழிப்பாதை, வின்ச் பகுதிகளிலும், மலைக்கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

நேற்று இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 5 மணிக்கு பழனி சண்முகநதியில் தீர்த்தவாரி உற்சவத்துக்கு சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரேற்றம் நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தைப்பூசத் திருத்தேரில் வீற்றிருந்த தம்பதி சமேதர் சுவாமிக்கு வண்ணமலர்கள், பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

தேங்காய் உடைக்கப்பட்ட பின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் பச்சைக்கொடியசைக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரதவீதிகளில் ஆடி, அசைந்து உலா வந்தது.  பழனிக்கோயில் யானை கஸ்தூரி யானைகள் புத்துணர்வு முகாமுக்கு சென்றதால் திருக்கோயில் சார்பில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தேர் முக்கிய திருப்பங்களில் திருப்பப்பட்டது.    தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் கைதட்டி அரகர, அரகர கோஷம் எழுப்பினர். இரவு 7.30 மணிக்குமேல் சுவாமி தந்த சப்பரத்தில் தேர்க்கால் பார்த்தல் நடைபெற்றது. நாளை சனிக்கிழமை வானவேடிக்கையும்,  ஜன.20ம் தேதி தெப்பத்தேரோட்டமும் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால். பழனி எம்.எல்.ஏ., வேணுகோபாலு, பழனி யூனியன் சேர்மன் செல்லசாமி, இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, நகர்மன்ற தலைவர் வேலுமணி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் பாஸ்கரன், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், பொன்னு எலெக்ட்ரிக்கல்ஸ் விஸ்வநாதன், காண்ட்ராக்டர் நேரு, சுகந்தவிலாஸ் மகேஷ், மலையப்பசாமி வைத்தியசாலை கதிர்வேல்,  சங்கராலயம் முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள், தீபம்லாட்ஜ் சீனிவாசன், சுப்ரமண்யா பொறியியல் கல்லூரி சேர்மன் ஜனார்த்தனன், கே.வி.மருத்துவமனை மருத்துவர், வேலுச்சாமி, டி.எஸ்.மருத்துவமனை மருத்துவர் செந்தாமரைச்செல்வி, அருள்முருகன் ரெசிடென்ஸி முத்துராமலிங்கம், சங்கர் அன்கோ சுந்தர், முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், ஆயக்குடி வ.உ.சி பள்ளி தாளாளர் முத்து, சரவணா நினைவு பொதுதர்ம அறக்கட்டளை தலைவர் சண்முகானந்தம், எஸ்பிஎன்ஏ., பள்ளி தாளாளர் சுந்தரம், ராயல் பார்க் ஷாகுல் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.