நகைக்கடை உரிமையாளர் மகன் கடத்தல்
தருமபுரி கடை வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அபிஜீத்(22). இவர்கள் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை தந்தையும், மகனும் கவனித்து வருகின்றனர்.இந்த


தருமபுரியில் நகைக்கடை உரிமையாளர் மகன் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி கடை வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அபிஜீத்(22). இவர்கள் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை தந்தையும், மகனும் கவனித்து வருகின்றனர்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் விற்பனை முடிந்து கடையை அபிஜீத் பூட்டிச் சென்றாராம். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதில், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், சங்கர் பல்வேறு இடங்களில் மகனை தேடியுள்ளார். ஆனால், அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விவரம் தெரியவரவில்லையாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சங்கர் தருமபுரி நகர காவல் நிலையத்தில், தனது மகன் அபிஜீத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பதாகவும், அவர்கள் தன்னிடம் தொடர்பு கொண்டு ரூ. 50 லட்சம் பணத்தை கேட்டதாகவும், தனது மகனை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸôர் காணாமல் போன அபிஜீத்தை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...