திருக்கோவிலூர் அருகே குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் பலி
திருகோவிலூர் அருகே குளிர்சாதனப் பெட்டி வெடித்து தலைமையாசிரியர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-


திருகோவிலூர் அருகே குளிர்சாதனப் பெட்டி வெடித்து தலைமையாசிரியர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கந்தவேலு 43 இவர் ஆடூர் குளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுகந்தி 35 என்ற மனைவியும் மாலவி 21 அருணா 17 சிந்துஜா 14 ஆகிய மகள்களும் உள்ளனர்.
அருணா சென்னை தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். சிந்துஜா மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலுள்ளார். நேற்று இரவு அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீர் என குளீர் சாதனை பெட்டி தீ பிடித்து எரிந்தது. உடனடியாக தீயை அணைக்கச் சென்ற போது அந்த குளிர் சாதனப்பெட்டி வெடித்தது.
இதில் கந்தவேலு, சுகந்தி கந்தவேலுவின் தாய் பார்வதி 75 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயரிந்தனர். மாலதி படுகாயம் அடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த கந்தவேலு, சுகந்தி கந்தவேலுவின் தாய் பார்வதி ஆகியோரின் உடல்களை மணலூர்பேட்டை போலீஸார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் விளந்தை கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருகோவிலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...