/

கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கேரளாவுக்கு லாரியில் கடந்த வாரம் ரேசன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்ட 3 பேருக்கு உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு எஸ்.பி- யின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில்

News image
Updated On :6 ஜூலை 2014, 11:20 am

அறிவழகன்

கேரளாவுக்கு லாரியில் கடந்த வாரம் ரேசன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்ட 3 பேருக்கு உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு எஸ்.பி- யின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஞாயற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், வீரபாண்டி, கோம்பை, தேவாரம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியபாரிகள் தினந்தோறும் ரேசன் அரிசிகளை சேகரித்து கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாகவும், குமுளி வழியாகவும் அரசு, தனியார் பஸ்கள், ஜீப்கள், காய்கறி லாரிகள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள், கழுதைகள் மூலமாகவும், வாரச்சந்தைகளில் இருந்து கூடார மாட்டுவண்டிகளிலும் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக்கு, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸôருக்கும் சிலர் கொடுக்கும் தகவலின்படி, பல்வேறு நடவடிக்கைகளும், கைது சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து ரேசன் அரிசி பதுக்குவதும், கடத்துவது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 25-ந்தேதி கம்பத்திலிருந்து மினி லாரியில் காய்கறிகளுடன் 600 கிலோ ரேசன் அரிசியை பிராண்ட் அரிசிபோல் 25 கிலோ மூட்டையாக போடப்பட்டு கடத்தும்போது, உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸôரிடம் பிடிபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கம்பம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகூர் மீரான் மகன் புரோஸ்கான்(50), ஜூவனந்தம் தெருவைச் சேர்ந்த ராஜூ மகன் முத்துக்குமார்(40), காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சுப்பரமணி மகன் மோகன்தாஸ்(60) ஆகிய 3 பேரும் தொடந்து கடந்த 2 வருடங்களாக ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திய தொடர் விசாரனையில் தெரியவந்தது.

இந்த 3 பேரின் மீதும் தென் மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி சுவாமிநாதன் பரிந்துரையின்படி, தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுóபி பிரிவு போலீஸார் மதுரை மத்திய சிறையில் உள்ள 3 பேரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.