மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய நடத்துநர் இருவர் மீது வழக்கு

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(47).அரசு பேருந்து ஓட்டுநரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.ஆலங்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட போக்குவரத்து

News image
Updated On :20 ஜூலை 2014, 12:14 pm

பார்திபன்

ஆலங்குடியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநர் இருவர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸôர் வழக்கு பதிவு செய்தனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(47).அரசு பேருந்து ஓட்டுநரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.ஆலங்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட போக்குவரத்து பணிமனையில் அண்ணா தொழிற்சங்கத்தில்  தலைவர்,செயலர்,பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது.

இதில் செயலர் பதவிக்காக மாசிலாமணியும்,ஆலங்குடியைச் சேர்ந்த நடத்துநர் கோ.மாணிக்கம் என்பவரும் போட்டியிட்டனர்.அதில் மாசிலாமணி வெற்றி பெற்றார்.தேர்தல் போட்டி காரணமாக இருவருக்கும் விரோதம் இருந்துள்ளதுஇந்நிலையில் மாசிலாமணி  சனிக்கிழமை மாலை போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள தேநீர் விடுதியில் நின்றாராம்.அப்போது அங்கே வந்த மாணிக்கம், பாப்பான்விடுதியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய இருவரும் மாசிலாமணியை அவதூறாக பேசியதுடன் தாக்கியுள்ளனர்.இதனால் காயமடைந்த மாசிலாமணி சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மாசிலாமணி அளித்த புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி போலீஸார் மாணிக்கம், சிவக்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.