/

திருக்கோவிலூரில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் தொழிலாளி கொலை

திருக்கோவிலூர் அருகே டி.கீரனூரில் ஓய்வு பெற்ற வங்கி மோலாளர் வீட்டில் பணிபுரிந்த தொழிலாளி நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:38 am

ச. மயில்வாகனன்

திருக்கோவிலூர் அருகே டி.கீரனூரில் ஓய்வு பெற்ற வங்கி மோலாளர் வீட்டில் பணிபுரிந்த தொழிலாளி நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். டி. கீராணூரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் நாராயணன் வயது 63 இவர் இந்தியன் ஓவர்சியஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரது வீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் கோடி தண்டலம் கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகள் தனலட்சுமி என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 53 திருமணம் ஆகவில்லை. இநிநிலையில் நேற்று இரவு நாரயணன், மற்றும் அவரது மனைவி பானுமதி ஆகியோர் அவர்களது வீட்டில் தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

வேலைக்கார பெண்ணான தனலட்சுமி  ஹாலில் தூங்கி கொண்டிருந்தார். பின்னிரவு 12. 40 மணி அளவில் திடீரென  அலரல் சத்தம் கேட்டு எழுந்த நாராயணன் தனது அறை வெளிபக்கமக பூட்டியிருந்ததால் அதே பகுதியில் உள்ள அக்கா மகன் ஏழுமலைக்கு செல்போனில் தொடர்பு கொண்டார்.

அதன்பின் அங்கு வந்த ஏழுமலை வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் தூங்கி கொண்டிருந்த தனலட்சுமியின் முதுகில் கத்தியால் குத்துபட்டு கொலையுண்டு கிடந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.