ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தத்தளிக்கும் இலங்கை: வங்கதேசத்தை வெல்ல போராட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வங்க் தேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடத்தொடங்கியது.

News image
Updated On :6 மார்ச் 2014, 2:15 pm

வேல்முருகன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வங்க் தேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடத்தொடங்கியது.

 அந்த அணியின் துவக்க வீரர்கள் அனமவுல்(49) ரகுமான்(39),  நல்ல துவக்கத்தை தந்த போதிலும் அடுத்தடுத்து வீரர்கள் அவுட் ஆனதால்  50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனை தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரரா முதல் ஒவரிலேயே டக் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து வந்த சங்கர்கரா 2 ரன்னிலும், ஜெயவர்த்தனே ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆக 8 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் சுதாரித்து ஆடிய பிரியன்சன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜியவர் ரகுமான் பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து திரிமன்னேவும் 33 ரன்னில் வெளியேற அந்த அணி வெற்றி தடுமாற்றத்துடன் ஆடிவருகிறது.

தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 30 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களுடன் ஆடிவருகிறது. மேத்யூஸ் 30 ரன்களுடனும், டி சில்வா 9 ரன்களுடனும களத்தில் உள்ளனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.