ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மோடியை ஆண்மையற்றவர் என்று கூறிய குர்ஷித்: இப்போது நர்சரி பள்ளி மாணவர் என்கிறார்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆண்மையற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று நர்சரி பள்ளி

News image
Updated On :19 மார்ச் 2014, 11:13 am

வேல்முருகன்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆண்மையற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று நர்சரி பள்ளி மாணவருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய குர்ஷித், குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் மோடிக்கு உச்ச நீதிமனறம் நற்சான்றிதழ் அளித்துள்ளதா என்பது குறித்து  தனக்கு தெரியாது என்றார். கீழ் நிதிமன்றம் அவருக்கு சம்மன் அளிக்க மறுத்துள்ளதை விமர்சித்த குர்ஷித், நர்சரி பள்ளியில்படிக்கும்போதே டாக்டர் பட்டம் பெற்றதாக மாணவர்கள் நினைப்பது போல கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைமுன்வைத்து தான் குற்றமற்றவன் என மோடி பிரசாரம் செய்கிறார் என்றார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில் மோடியின் வளர்ச்சியை பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் உள்ளனர், அவர்கள் அவர்களாகவே தோல்வி அடைவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.