கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குடும்ப தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில்  குடும்பத்தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயைப் பற்ற வைத்து

News image
Updated On :28 மார்ச் 2014, 11:01 am

கிருஷ்ணமூர்த்தி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில்  குடும்பத்தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயைப் பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,.

மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் முத்தழகன்(வயது 41), இவர் போர்வெல் வண்டியில் கூலித் தொழிலாளி. இவருக்கு மீனா (வயது28), என்ற மனைவியும், சரஸ்வதி(7), சத்யா(3), தனலெட்சுமி(1) உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். முத்தழகன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று தங்கி வேலை பார்த்துவிட்டு பல நாள் கழித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவு வழக்கம் போல் குடி போதையில் முத்தழகன் வீட்டுக்கு வந்து மனைவி மீனாவுடன் தகராறு செய்துள்ளார். விடிய விடிய தகராறு செய்ததால் மனமுடைந்த மீனா, விடியற்காலையில் கணவன் முத்தழகன் வெளியில் சென்றதை அறிந்து உடல் முழுவதும் சேலையை சுற்றிக் கொண்டு மண்ணெண்ணையை தன் தலையிலும், தன் குழந்தைகள் மீதும் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென பரவியது. இதனால் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்து காப்பாற்ற முயன்றனர். இதில் தாய் மீனா மற்றும் அவரது மகள்கள் சரஸ்வதி. சத்யா ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொரு மகளான 1 வயதுடைய தனலெட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தனலெட்சுமி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த மணப்பாறை துணை கண்காணிப்பாளர் முத்தரசு வையம்பட்டி ஆய்வாளார் அப்துல் ரஹ்மான், புத்தாநத்தம் சிறப்பு உதவி ஆய்வாளார் கந்தசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மூவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இச்சம்பவம் புத்தாநத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.