/

கண்ணகி கோயிலுக்கு வாழை மரம் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு: தமிழக-கேரள எல்லையில் மறியல்

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவிற்கு, தமிழகத்திலிருந்து வழக்கமாக கொண்டு செல்லும் வாழைமரத்தினை கேரள வனத்துறை கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் செவ்வாய்கிழமை இரவு

News image
Updated On :14 மே 2014, 1:22 pm

அறிவழகன்

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவிற்கு, தமிழகத்திலிருந்து வழக்கமாக கொண்டு செல்லும் வாழைமரத்தினை கேரள வனத்துறை கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் செவ்வாய்கிழமை இரவு தமிழக-கேரள எல்லையில் வாழைமரம் கொண்டு சென்ற டிராக்டரை குறுக்கே மறித்து மறியல் போராட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் ஈடுபட்டனர்.

          மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா சித்திரை முழு நிலவு நாளில்  மே 14-ல் நடைபெறுவதால், அதற்கான அலங்கார ஏற்பாடுகளை கம்பம் மங்கலதேவி க்ண்ணகி அறக்கட்டளையினர், எப்போதும் திருவிழாவிற்கு முதல் நாள் வாழைமரம், தோரணங்கள் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டு இருந்தனர். இந்நிலையில், செவ்வாய்கிழமை கம்பத்திலிருந்து ஒரு டிராக்டரில் வாழைமரம், தோரணங்கள், அலங்காரப் பொருட்களை கொண்டு சென்றனர். கேரள வனத்துறையினர் வன எல்லையிலேயை அனுமதி மறுத்தனர்.

 மேலும், வனத்துறை உயர் அதிகாரிகள் தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது, இதனால், மீண்டும் தமிழகம் திரும்பி வராத முடியாத நிலையில் தமிழக-கேரள எல்லை குமுளியில் வாழைமரம் கொண்டு வந்த டிராக்டரை சாலையின் குறுக்கே மறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

          இதனால், தமிழக-கேரள போக்குவரத்து முழுவதும் தடையேற்பட்டது. மேலும், பதட்டம் ஏற்பட்டது. பின்னர், தமிழக போலீஸôர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் டிராக்டரை நிறுத்துமாறும், அதிகாலையில் அனுமதி பெற்று தருவதாக பேச்சுவார்த்தையில் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.