நோட்டா முறையால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு: இடதுசாரிக் கூட்டமைப்பு
நோட்டா முறையால் ஜனநாயகத்துக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இடதுசாரிக் கட்சிகள் கூட்டமைப்பு தெரிவிள்ளது.இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் சனிக்கிழமை


நோட்டா முறையால் ஜனநாயகத்துக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இடதுசாரிக் கட்சிகள் கூட்டமைப்பு தெரிவிள்ளது.இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கு, ஊழல் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றால் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் பயனை பா.ஜ.கவினர் அறுவடை செய்து கொண்டனர்.இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமாகும்.தேர்தலில் வென்றாலும், தோற்றாலும், மக்கள் பிரச்னைகளை நாங்கள் எழுப்புவோம்.மக்கள் நலனே முக்கியமாகும். புதுச்சேரியில் இடதுசாரிகள் வேட்பாளருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என பிரிவால் ஜனநாயகம் தான் பாதிக்கப்படும். அரசியல்வாதிகளில் நல்லவரை தேர்வு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும். நோட்டா வாய்ப்பால் தேர்தல் நடைமுறையே கேலிக்கூத்தாகி உள்ளது.
புதுச்சேரியில் பதிவான மொத்த வாக்குகளில் 35 சதம் வாக்குகளை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 65 சதவீதம் வாக்காளர்கள் அவர்களுக்கு எதிராக தான் வாக்களித்துள்ளனர்.தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும். முன்பு இந்திரஜித் குப்தா மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்த வேண்டும்என அறிக்கை அளித்திருந்தார். அப்போது தான் பணம், மது, போன்றவற்றுக்கு விடை தர முடியும். ஊழலும் குறையும்.
புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய தேவையான தனி மாநில அந்தஸ்து, நிதி நெருக்கடி,கடன் சுமை ரத்து, தொழில் வளர்ச்சி போன்ற பிரச்னைகளில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைந்து விவாதம் நடத்தி தீர்வு கிடைக்க பாடுபடுவோம் என்றார் விசவுநாதன்.
மார்க்சிஸ்ட் மாநில செயலர் வெ.பெருமாள், பார்வர்ட் பிளாக் முத்து, ஆர்.எஸ்.பி. லெனின், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் ராஜாங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...