தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் 63 பவுன் நகைகள் திருடியதாக தம்பதி கைது
தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் 63 பவுன் தங்க நகைள் மற்றும் ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை திருடியதாக தம்பதியை போலீஸார்


தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் 63 பவுன் தங்க நகைள் மற்றும் ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தை திருடியதாக தம்பதியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் சூசையா. தொழிலதிபரான இவர் அரசு வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவரது வீட்டில் கடந்த 30 ஆம் தேதி பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 63 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.75 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடுபோனது.
இதுகுறித்து சூசையாவின் மனைவி ராஜம்மாள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சூசையா வீட்டில் வேலைபார்த்த அதே பகுதியை சேர்ந்த அந்தோனியம்மாள் நகை மற்றும் பணத்தை திருடியதும், அவரது சுரேஷ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சுரேஷ் மற்றும் அந்தோனியம்மாளை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்கநகைகளை போலீஸார் மீட்டனர். மீதி நகைகள் எங்கு உள்ளன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...