விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகைக்கடை வியாபாரியை விசாரணைக்கு போலீஸார் அழைத்துச் சென்றதைக் கண்டித்து மறியல்:கடையடைப்பு

புதுச்சேரியில் நகைக்கடை வியாபாரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதைக் கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை

News image
Updated On :28 நவம்பர் 2014, 12:30 pm

சுஜித்குமார்

புதுச்சேரியில் நகைக்கடை வியாபாரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதைக் கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து நேரு வீதி-பாரதி வீதி சந்திப்பில் மறியல் செய்தனர்.

புதுச்சேரி கொசக்கடை வீதியில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. இதில் நகைக்கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணனை, திருட்டுநகை வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வியாழக்கிழமை இரவு தமிழக போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பஜாரில் உள்ள அனைத்து நகை கடைகளையும் அடைத்து விட்டு, புதுச்சேரி மையபகுதியான நேருவீதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவாக வணிகர் கூட்டமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தமிழக போலீசாருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் தமிழக போலீசார் பிடித்து சென்ற பாலகிருஷண்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பெரியகடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக போலீசாரிடம் பேசி, பாலகிருஷ்ணனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவசங்கரன், பாலு ஆகியோர் கூறியது:

புதுவையில் வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருகிறது.நகைக் கடை வியாபாரிகளை அடிக்கடி ரெüடிகள் மிரட்டி வந்தனர். தற்போது  திருட்டு நகை விசாரணை என்ற பெயரில் வியாபாரி பாலகிருஷ்ணனை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அவரை விடுவிக்கும் வரை நகைக்கடைகளை திறக்க மாட்டோம் எனத்தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் நேருவீதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.