மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் சாவு

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

News image
Updated On :1 அக்டோபர் 2014, 8:03 am

பார்திபன்

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்கவர் நடராஜன் மகன் சதாசிவம் (28).ஓட்டுநனரான இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புளிச்சங்காடு கைகாட்டியில் இருந்து ஆலங்குடி நோக்கி லாரியில் சென்றுள்ளார். அப்போது லாரியில் டீசல் இல்லாமல் வடகாடு அருகே நின்றுவிட்டதாம்.

இதையடுத்து சதாசிவம் ஆலங்குடி சென்று டீசல் வாங்கிக்கொண்டு மெக்கானிக்கான நெம்மகோட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (26) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வடகாடு நோக்கி புறப்பட்டுள்ளார்.அப்போது கீழாத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

 இதில் பலத்த காயமடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுரேஷை அக்கம்பக்கதிதனர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தகவல் அறிந்து அங்கு வந்த வடகாடு போலீஸார் சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.