வந்தவாசி அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் மனைவி செல்வி(35), முருகன் மனைவி சரளா(31). இருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆக. 4-ம் தேதி செல்வி ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பும்போது சரளா, அவரது கணவர் முருகன், மைத்துனர்கள் சரவணன், ஏழுமலை, மாரி ஆகியோர் அவரை ஆபாசமாக பேசி தாக்கினராம். இதில் மனமுடைந்த செல்வி அன்றிரவு தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீவைத்துக் கொண்டுள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஆக. 5-ம் தேதி இறந்தார்.
இதுகுறித்து லட்சுமணன் கீழ்க்கொடுங்காலூர் போலீஸில் அளித்த புகாரில், சரளா உள்ளிட்ட 5 பேரும் ஆபாசமாக பேசி தாக்கியதால்தான் தனது மனைவி செல்வி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக சரளா, முருகன், சரவணன், ஏழுமலை, மாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கீழ்கொடுங்காலூர் போலீஸôர் சரளாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.