மணப்பாறையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பலி
மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் வைஷ்ணவி (வயது 8). மணப்பாறையில் உள்ள தனியர் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். வைஷ்ணவியின் தந்தை கடந்த ஒரு


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மர்ம காய்ச்சலுக்கு 2-ஆம் வகுப்பு பள்ளி சிறுமி வெள்ளிக்கிழமை பலியானார்.
மணப்பாறை தெற்கு லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் வைஷ்ணவி (வயது 8). மணப்பாறையில் உள்ள தனியர் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். வைஷ்ணவியின் தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டதையடுத்து முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த நிலையில் வைஷ்ணவிக்கு காய்ச்சல் அடித்துள்ளதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் தொடர்ந்து இரண்டு நாட்களாக காய்ச்சல் இருக்கவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரது தாய் கொண்டு சென்றார். அங்கு புற நோயாளியாக வைஷ்ணவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கவே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைஷ்ணவி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாலையில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து ரத்த வாந்தியும் வந்துள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து வைஷ்ணவியின் சடலத்தை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மணப்பாறைக்கு எடுத்து வந்தனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பள்ளி சிறுமி பலியான சம்பவம் பற்றி தகவலறிந்து சுகாதார ஆய்வாளர்கள் வைஷ்ணவியில் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர். மணப்பாறை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி பலியானதை அடுத்து அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...