விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுமிகள் பாலியல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2014, 10:33 am

சுஜித்குமார்

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் வெளியிட்ட அறிக்கை:

அப்பாவி பள்ளி மாணவிகளை திட்டமிட்டு பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் தப்பி வைக்க திட்டமிட்டனர். ஆனால் வேறு வழி இல்லாமையால் காலம் தாழ்த்தி கைது செய்தனர்.

மேலும் அனைத்துக்கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தால் அப்பாவிகள் சிலரை கைது செய்துள்ளனர். இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டோருக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸôர் என பட்டியல் நீளுகிறது.

அவர்களை தப்பிக்க விடுவதின் மர்மம் என்ன. இதன் பின்னணியில் ஆளும் கட்சியினரும் உள்ளதாகத் தெரிகிறது.

இதே போல் அபிஷேகப்பாக்கத்தில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வெறும் காவலர்கள் மட்டுமே தண்டித்தனர். உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்துறையிலேயே அரசியல் செல்வாக்கு உள்ளோர் தப்பித்து விடுகின்றனர்.புதுவை காவல்துறை இவ்வழக்கை நடத்தினால் நியாம் கிடைக்காது. எனவே சிபிஐ-க்கு வழக்கு விசாரணை மாற்ற வேண்டும்.

இதை செய்ய அரசு தவறினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் பாவாணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.