கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே தொழில் அதிபரை காரில் கடத்த முயன்றதாக புகார்: போலீஸார் வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). ரியல் எஸ்டேட், வணிக வளாகம், தங்கும் விடுதி  ஆகிய தொழில் செய்து வருகிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், காரகுப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 11:08 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே தொழில் அதிபரை காரில் கடந்த முயன்ற புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). ரியல் எஸ்டேட், வணிக வளாகம், தங்கும் விடுதி  ஆகிய தொழில் செய்து வருகிறார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், காரகுப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த துப்பாக்கி ராமன் என்பவரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுப்பிரமணி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். வீட்டின் அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம குப்பல், சுப்பிரமணியைத் தாக்கி கடத்த முயன்றதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தில் குடியிருப்போர் சம்பவ இடத்துக்கு கூடத் தொடங்கியதை அடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டதாம். மர்ம கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சுப்பிரமணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடத்தல் சம்பவம் குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.