விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெ.மீதான தீர்ப்பு: கர்நாடக அரசின் பழிவாங்கும் போக்கு என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம்

காவிரி நீர் பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜெ.மீதான தீர்ப்பில் கர்நாடக அரசு பழிவாங்கும் வகையில் செயல்பட்டுள்ளது என பகுஜன் சமாஜ்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 11:20 am

சுஜித்குமார்

காவிரி நீர் பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜெ.மீதான தீர்ப்பில் கர்நாடக அரசு பழிவாங்கும் வகையில் செயல்பட்டுள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில துணைத் தலைவர் எம்.பாவாடை ராஜா திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மக்கள் நலன் கருதி காவிரி நீர் பிரச்னையில் நியாயம் பெற ஜெயலலிதா போராடி வந்தார். தமிழக மக்களின் பணம் ரூ.100 கோடியை அபகரிக்கும் நோக்கில் கர்நாடக அரசு ஊழல் வழக்கில் பழிவாங்கும் போக்கில் செயல்பட்டுள்ளது. நீதிபதி பாரபட்சமாக செயல்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒற்றுமை இல்லாமல் அரசியல் கட்சிகள் இப்பிரச்னையில் அரசியல் செய்வதை பகுஜன் சமாஜ் கட்சி கண்டிக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ரூ.66 கோடி தான். ஆனால் இதற்குண்டான குறிப்பிட்ட அபராதத்தை வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.100 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்நாடக அரசு சதிச்செயல் புரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்றார் பாவாடைராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.