மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புதுவை பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு


புதுவை பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வியாழககிழமை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேராசிரியர் அரிகரன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்த்துறை மாணவனைத் தாக்கிய பேராசிரியர்கள் அரிகரன், பூஷன் சுதாகர் உள்ளிட்டோர் தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும், புதுச்சேரி மாணவர்களுக்கு மற்ற படிப்புகளில் உள்ளது போல் அனைத்து படிப்புகளிலும் 25 சதவித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கும் உடனே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். டாக்டர் கே.ஏ.குணசேகரனின் பலி ஆடுகள் நாடகத்தை நடத்த அனுமதியளிக்க வேண்டும்.
துணைவேந்தரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரித்த தமிழக முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் அறிக்கையை வெளியிட வேண்டும். இவை தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி மத்திய அரசையும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். பல்வேறு சமூக அமைப்புகளைச் சே்ர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...