இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ஸ்ரீவிலி. கோவிலில் ருத்ரயாகம்

தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோவிலில்

News image
Updated On :5 ஏப்ரல் 2015, 9:26 am

கோ.ஜெயக்குமார்

தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ருத்ரயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி, அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் தலைமையில் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் ருத்ரயாகம் நடைபெற்றது. யாகத்தை ரகு (எ) கைலாசபட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், ஒன்றியச் செயலாளர் மயில்சாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சரோஜா நடராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் அ.மகேஸ்வரன், ரவிக்குமார், காமராஜர், டி.வி.கந்தசாமி, முனியசாமி, முன்னாள் நகரச் செயலாளர் பி.கிருஷ்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.