நார்த்தாமலை கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கிய பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாவு
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய பெண்


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய பெண் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி சரஸ்வதி(50) இவர் தனது தங்கை மகன் ராஜேஸ்குமாருடன்(35) நார்த்தாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்திருவிழவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார், பின்னர் மறுநாள்(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பால்குட விழாவில் கலந்து கொள்வதற்கு வீட்டில் வளர்கப்படும் பசு மாட்டின் பாலை கறந்து செல்ல இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி நான்கு வழிச்சாலை வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை புதுக்கோட்டை வந்து கொண்டிருந்துள்ளனர். வழியில் நெடுச்சேரி பேரூந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேரூந்து மீது இருசக்கர வாகனம் மோதி இவர்கள் இருவரும் கீழே சாலையில் விழுந்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஆபத்தான நிலையில் ராஜேஸ்குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் ஆர். பாலசுந்தரம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...