சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மருந்தியல்துறையில் பயிலும் நூறு சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர் மாணவர்களை தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கியுள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்தியில்துறை (பி.ஃபார்ம்) மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல் நிறுவனம் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். இதில் பயிலும் 45 மாணவ, மாணவியர்களும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா 45 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ஜே.வசந்தகுமார், பொறியியல்புல முதல்வர் எஸ்.வேலுசாமி, மருத்தியல்துறை தலைவர் கே.கண்ணன், பல்கலைக்கழக பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி ஆர்.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
டி.ஃபார்ம் படித்து வரும் மாணவர்களுக்கு நூறு சதவீத வேலைக்காண பணிஆணை தயாராக உள்ளது. தொடர்ச்சியாக பார்மசி நிறுவனங்கள் நேர்முகத்தேர்விற்கு வருவதால், ஒரு மாணவர்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட பணி வாய்ப்புகள் உள்ளது. 2014-15 ஆண்டு படித்தும் பி.ஃபார்ம், டி.ஃபார்ம் மாணவ, மாணவியர்களுக்கு பல்கலையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புதுறை வாயிலாக நூறு சதவீதம் பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேலைவாய்ப்பு அதிகாரி ஆர்.பாஸ்கர் தெரிவித்தார்.