கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் ரயில் மறியில்: இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேர் கைது

சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2015, 1:04 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகஅரசு அணைக்கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ (சிதம்பரம்), இந்திய கம்யூ கட்சி விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் வி.பொண்ணுபாண்டியன் எம்எல்ஏ (ஸ்ரீவில்லிபுத்தூர்), மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூ கட்சி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர்,  மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன் உள்ளிட்டோர் சிதம்பரம் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை காலை திருச்சி-சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் டிஎஸ்புி எஸ்.சுந்தரவடிவேலு தலைமையிலான நகர போலீஸார் மறியலில் ஈடுபட்ட இரு எம்எல்ஏக்கள், 31 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை கைது செய்து மாலை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.