சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் தாலிசெயின் திருட்டு
சிதம்பரம் நகரில் பெண்ணிடம் நூதன முறையில் மர்மநபர்கள் 7 பவுன் தாலிசெயினை திருடிச்சென்றனர்.


சிதம்பரம் நகரில் பெண்ணிடம் நூதன முறையில் மர்மநபர்கள் 7 பவுன் தாலிசெயினை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் பதினாறுகால் மண்டபத்தெருவைச் சேர்ந்த தனபால் மனைவி இந்திராணி (68). இவர் வெள்ளிக்கிழமை காலை மளிகை பொருள்கள் வாங்கிக் கொண்டு கீழரதவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் மூன்று பேர் தாங்கள் மப்ஃடி போலீஸ் என்றுக்கூறி, செயினை பறித்துச் செல்லும் கும்பல் வந்துள்ளது. எனவே செயினை கழற்றி கையில் வைத்துக் கொள்ளவும் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி மூதாட்டி இந்திராணி தனது கழுத்திலிருந்து 7
பவுன் தாலி செயினை கழற்றிக்கொடுத்துள்ளார்.
அதனை மர்மநபர் ஒருவர் பேப்பரில் வைத்து மடித்து தருவதாக நடத்து, வெறும் பேப்பரை மடித்து அவரை பையில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவர் பொட்டலத்தை பிரித்து பார்த்த போது செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...