நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சப்த நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர்
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் ஞாயிற்றுக்கிழமை கொண்டு


உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்களால் சப்த நதிகளில் இருந்து புனித நீர் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.. பின்னர் புனிதநீரை ஊர்வலமாக நான்குவீதிகள் வலம் வந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற ஏப்.23-ம் தேதி முதல் 12 கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெறுகிறது.
கும்மாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, (திரிவேணி சங்கமம் அலகாபாத்) , சிந்து (காஷ்மீர்) , கோதாவரி (ஆந்திரா), தலைகாவிரி(கர்நாடகா), நர்மதா (ஓங்காரிஸ்வரா) ஆகிய சப்த நதிகளில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டு வர பல்வேறு பிரிவுகளாக பொதுதீட்சிதர்கள் சென்றர். இவர்கள் அனைவரும் சென்னையில் ஒருங்கிணைந்து சப்த நதிகளில் புனிதநீருடன் திங்கள்கிழமை ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த புனதநீரை எடுத்து வந்த பொதுதீட்சிதர்களுக்கு இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் மற்றும் திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் புனித நீர் குடங்கள் நான்குவீதிகளிலும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று புனிதநீரை வரவேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களிள் கமிட்டி செயலாளர் ஜ,சர்வேஸ்வரதீஷதர், கும்பாபிஷேகம் கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...