கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல்: பா.வளர்மதி வேட்புமனுக்களை பெற்றார்

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் சிதம்பரம் வாண்டையார் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :15 ஏப்ரல் 2015, 1:10 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் சிதம்பரம் வாண்டையார் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் கடலூர் மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர்கள்-2 பேர், இணைச்செயலாளர், மாவட்டப் பொருளாளர், மாவட்ட அவைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. தேர்தல் பொறுப்பாளரும், தமிழக சத்துணவுத்துறை அமைச்சருமான பா.வளர்மதி மற்றும் தேர்தல் ஆணையர்கள் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் எம்எல்ஏ (வேலூர்), கே.ஜி.ரமேஷ் எம்எல்ஏ, கோவி.சம்பத்குமார் எம்எல்ஏ, வேலூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் சூளை வி.எம்.மணி, வேலூர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.

மாவட்டச் செயலாளர் பதவிக்கு மொத்தம் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விபரம்: தற்போதைய மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் என்.ராமு, சேலவிழி செல்வராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், எம்.கார்த்திக், பி.ஜி.மனோகரன், செந்தில்குமார், எஸ்.பி.சரவணன், சுந்தரமூர்த்தி, துரை.பன்னீர்செல்வம். மாவட்ட நிர்வாகிகளுக்கு 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.