/

ஏப். 21, 22 இல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2015, 9:23 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் லிங்கபாஸ்கர் அளித்த பேட்டி:  பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தேவையான உபகரணங்களை உடனே வங்க வேண்டும்,  நிதியுதவியை உடனே வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்பை கைவிட வேண்டும், நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

 இந்நிலையில், தற்போது இரண்டு நாள் வேலைநிறுத்தமாக ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப்ப போராட்டம் நடைபெறுகிறது.  தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

 ஏறத்தாழ 120 அலுவலர்களும் 430 ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால், தொலைத்தொட்பு சாதனங்களின் சேவை முற்றிலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

 பேட்டியின்போது, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் ஜெயமுருகன், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்டச் செயலர் பாலகண்ணன், அதிகாரிள் சங்க மாவட்டச் செயலர் மரிய அந்தோணி பிச்சையா, எக்ஸிக்கியூட்டிவ் அலுவலர் சங்க மாவட்ட செயலர் சரவணன், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாவட்ட செயலர் சுரேஷ் காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.