பதவி உயர்வு கிடைக்காமல் புதுவை அரசு ஊழியர்கள் பாதிப்பு: நாராயணசாமி
முறையான பதவி உயர்வு கிடைக்காமல் புதுவை அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


முறையான பதவி உயர்வு கிடைக்காமல் புதுவை அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் அரசு மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் என்.ஆர். காங்கிரஸ் அரசால் கடந்த 4 ஆண்டுகளில் 5000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்படாமல் தகுதி இல்லாதவர்கள் கொல்லைப்புறமாக அதுவும் முதல்வர் ரங்கசாமி தொகுதியில் இருந்து மட்டும் 90 சதவீதம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பல அரசுத்துறைகளில் பதவி உயர்வு இல்லாமல் அரசு ஊழியர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக இருப்போர் 25 ஆண்டுகளாக அதேநிலையில் தான் உள்ளனர். மின்துறையிலும் 20 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர் முதல் பொறியாளர் வரை அதே பகுதியில் தான் உள்ளனர்.
விவசாயம், கல்வித்துறைகளிலும் பதவி உயர்வு இல்லை. சிலர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்த பின் பதவி உயர்வு பெறும் நிலை உள்ளது. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாகவும், சுகாதாரத் துறையில் செவிலியர்கள் 30 ஆண்டுகளாகவும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு மத்திய அரசை அணுகி பல துறைகளில் பதவி உயர்வுக்கான அனுமதியை பெறவில்லை. மேலும் முதல்வரோ, அமைச்சர்கள், தலைமைச்செயலர், செயலாளர்களோ தங்கள் துறையில் பதவி உயர்வு கிடைப்பதற்கு தேவையான கேடர் ரிவியூ மறுபரிசீலனை எதுவும் 4 ஆண்டுகளாக செய்யவில்லை.இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நான் மத்திய அமைச்சராக இருந்த போது, பல துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு பெறவும் மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாமலேயே செய்துள்ளேன். 3000 ஆயிரம் காலியிடங்கள் மாநிலத்தில் பல துறைகளில் 3000 காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவற்றை நிரப்பவும், விதிப்படி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முதல்வர் ரங்கசாமி அரசே பொறுப்பாகும். அரசு ஊழியர் சம்மேளனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் பலமுறை கோரிக்கை வைத்தும் முதல்வரோ, அமைச்சர்களோ மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. தன் தொகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் விதிகளை மீறி நியமிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
28 தொகுதிகள் புறக்கணிப்பு பதவி உயர்வு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.ஆர். காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட 28 தொகுதிகள் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வரும் 2016-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அரசு ஊழியர்கள் ஆதரவு கிடைத்தால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...