/

மின்துறை தலைமை அலுவலகத்தில் தொ.மு.ச முற்றுகை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் தொ.மு.ச. சார்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2015, 7:19 am

சுஜித்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் தொ.மு.ச. சார்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் காவல்துறையில் தருவது போல் 13 மாத சம்பளம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு சம்பள குறைப்பு நடவடிக்கையை, தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் நிர்வாகம் தன்னிச்சையாக ஆர்ஆர்-ஐ திருத்தம் செய்து ஊதியத்தை குறைக்கக் கூடாது, அடிப்படை உரிமைகளை கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை தர வேண்டும். சீரான மாற்றல் கொள்கை, மருத்துவ காப்பீடு திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தொ.மு.ச சார்பில் போராட்டம் நடந்தது.

பொதுச் செயலாளர் இ.மதிவாணன் தலைமை தாங்கினார். தலைவர் செநதில்குமார், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மின்துறை தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கண்காணிப்பு பொறியாளர்கள் சங்கர், ரவி, ஆகியோர் தொழிலாளர்களிடம் பிரச்னைகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.  இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.