கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் மயங்கி விழுந்து கிடந்த அரியவகை பறவை மீட்பு

சிதம்பரம் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்த அரியவகை பறவையான பாம்புதாரா என்ற பறவையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 12:25 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்த அரியவகை பறவையான பாம்புதாரா என்ற பறவையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் அரிய வகை பறவை ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு அவ்வழியே சென்ற வால்காரமேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் அந்த இடத்திற்கு சென்று அலகில் நூல் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்த அரிய வகை பறவையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து இருநாட்கள் பராரமரித்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை பிச்சாவரம் காப்புக்காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர். இந்த பறவையை டார்டர் அல்லது பாப்புதாரா (Dartar or Snack Bird) என்ற அழைக்கப்படும். இப்பறவை உணவிற்காகவும், இனவிருத்திக்காகவும் நீர்நிலைப்பகுதியை தேடி வரும். வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.