கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கல்வி: ஜெ.குரு எம்எல்ஏ

பாமக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ

News image
Updated On :21 ஏப்ரல் 2015, 2:38 pm

ஜி.சுந்தரராஜன்

பாமக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ தெரிவித்தார்.

சிதம்பரம் கனகசபைநகர் சிவகாமி அம்மாள் கலையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சோழ மண்டல மாநாடு குறித்த சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி விளக்க பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆறு.கலையரசன் வரவேற்றார். நகரத் தலைவர் பெ.க.அருள், செயலாளர் தி.கல்லிஸ், ஒன்றியச் செயலாளர்கள் செள.ராஜா, பான்.சசிக்குமார், நா.கார்த்தி, ப.சரவணன், செல்வ.பிரதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாமக ஆட்சிக்கு வந்தால், என்ன செய்யும் என்பதை விளக்கும் மாநாடாக பாமக சோழ மண்டல மாநாடு ஜெயங்கொண்டத்தில் வருகிற 17-ம் தேதி நடத்தப்படுகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கப்படும். தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ஜெ.குரு தெரிவித்தார்.

கூட்டத்தில் பாமக மாநில துணைத் தலைவர்கள் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கி.தேவதாஸ் படையாண்டவர், மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர இளைஞரணி செயலாளர் திருமூர்த்திராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.