கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கொடிமரத்திற்கு மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரத்தில் மே.1-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் சித்சபை எதிரே

News image
Updated On :22 ஏப்ரல் 2015, 12:04 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மே.1-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் சித்சபை எதிரே உள்ள கொடிமரத்திற்கும், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறமே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற ஏப்.22-ம் தேதி முக்குறுணி விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் முதல் 12 கால யாகசாலை பூஜை தொடங்கி வைக்கப்பட்டது.

கொடிமரத்திற்கு மகாகும்பாபிஷேகம்:

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள தங்க கொடிமரத்திற்கு (த்வஜஸ்தம்பம்) புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆச்சாரியார்களால் கும்பநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் சித்சபையை சுற்றியுள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 2 கால பூஜை தொடங்கப்பட்டு நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, கூஷ்மாண்ட ஹோமம், ஸ்ரீ நடராஜர் அனுக்ஞை பூஜை, ஸ்ரீமுக்குறுணி விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஜ.சர்வேஸ்வர தீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பாதீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.