காட்டுமன்னார்கோயிலில் வீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
காட்டுமன்னார்கோயிலில் உள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் சிதித்ரை திருவிழா (பிரம்மோற்சவம்) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


காட்டுமன்னார்கோயிலில் உள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் சிதித்ரை திருவிழா (பிரம்மோற்சவம்) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார் அவதார ஸ்தலமான காட்டுமன்னார்கோயிலில் அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் கோயில் (வீரநாராயண சதுர்வேதிமங்கலம்) அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கொடியேற்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர். வருகிற ஏப்.29-ம் தேதி புதன்கிழமை இரவு கருடசேவை
நிகழ்ச்சியும், மே.2-ம் தேதி மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு புஷ்பபல்லக்கு உத்சவமும் நடைபெறுகிறது. மே.3-ம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி, செயல் அலுவலர் பா.வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...