கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்ரண்டன்ட் ஆய்வு

மே.1ந் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர்

News image
Updated On :28 ஏப்ரல் 2015, 11:46 am

ஜி.சுந்தரராஜன்

மே.1ந் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று முன்னேற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையம், விஐபி வாகனங்கள் நிறுத்தப்படும் நிரந்த பேருந்து நிலையம், ஸ்ரீநடராஜர் கோயில் யாகசாலை பகுதி, கோயில் உள்புறம், கோயின் மேலே முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கும்பாபிஷேகத்தை அமர்ந்து பார்க்கும் இடம், பொற்கூரை, ஆயிரங்கால் மண்டபம், தற்காலிக படிக்கட்டுகள் ஆகியவற்றை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் ஏ.ராதிகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டன்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்தது: கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புறவழிச்சாலையில் வரும் பேருந்துகளை நிறுத்தவதற்கு தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரில் வரும் பக்தர்கள் நிறுத்துவதற்காக பைசல் மகால் அருகே மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் கார்களை மேலவீதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்கு 23 இடங்களில் வழிகாட்டி போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. தற்காலிகமாக மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

ஆய்வின் போது சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, துணை ஆட்சியர் தினேஷ். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமலைச்சாமி, சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரடிவேலு, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், சுகாதாதுறை துணை இயக்கநர் டாக்டர் ஜவகர்லால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மோகனசுந்தரம், வட்டாட்சியர் எஸ்.சீனுவாசன் மற்றும் பொதுப்பணித்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.