கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முன் கார் சாகுபடிக்கு நாளை மணிமுத்தாறு அணைத் திறப்பு

மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1)

News image
Updated On :29 ஏப்ரல் 2015, 6:59 am

ஷேக் அப்துல்காதர்

மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) முன் கார் பருவ சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு அதிகமாக இருப்பதால் அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன் கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 1) அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்றார் அவர்.

இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட பகுதியில் 2756.62 நிலங்கள் பாசன வசதி பெறும். இப்பாசனத்திற்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே பாபநாசம் அணையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார் பருவ சாகுபடிக்கு 8,124 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்த காரணத்தால் அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உள்ளதால் முன் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்மட்டம்: புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 73.75 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 87.17 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.04 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 38 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 34.45 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.40 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 20 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது. அம்பாசமுத்திரத்தில் மட்டும் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.