திருப்பூரைச் சேர்ந்தவரிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக ரூ 10 லட்சம் நூதன மோசடி
குறைந்த வட்டிக்கு ரூபாய் 3 கோடி பணம் தருவதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்தவரிடம் ரூபாய் 10 லட்சமும் 22 செக்குகளையும் பெற்றுக்கொண்டு, காகிதம் வைத்த பெட்டியைக் கொடுத்து


குறைந்த வட்டிக்கு ரூபாய் 3 கோடி பணம் தருவதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்தவரிடம் ரூபாய் 10 லட்சமும் 22 செக்குகளையும் பெற்றுக்கொண்டு, காகிதம் வைத்த பெட்டியைக் கொடுத்து வெள்ளிக்கிழமை ஏமாற்றிய இரண்டு பேர் கொண்ட மோசடிக் கும்பலை கேரள மாநிலம் குமுளி போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் மாணிக்கம்(40), இவர் தனது நிலத்தையும், வீட்டையும் ஈடுவைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடனை திரும்ப செலுத்தாததால், கடன் தொகை ரூ. இரண்டரை கோடி ருபாய்க்காக இவரது நிலத்தையும், வீட்டையும் வங்கி கையகப்படுத்துவதாக சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாளிதழ்களில் வங்கி மூலமாக விளம்பரம் செய்திருந்தனர். இச்செய்தியைத் தொடர்ந்து குமுளியிலிருந்து ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரைச்சொல்லி அதிலிருந்து தொடர்பு கொள்வதாகக்கூறி கார்த்திக், விஜயகுமார் என்பவர்கள் மாணிக்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர் மாணிக்கத்திடம், ஐம்பது பைசா (6 சதவீதம்) குறைந்த வட்டியில் மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகவும், ஐந்து ஆண்டுகளில் கடனை திரம்பிச்செலுத்தினால் போதும் என்றும் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்து தருவதற்காக 10 லட்சம் ரூபாய் கமிஷன் தரவேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதனால், வியாழக்கிழமை குமுளி வந்த மாணிக்கம் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது டிப்டாப்பாக உடையணிந்து, கே.ஏ.55 கே 55 என்ற எண்ணுள்ள இன்னோவா காரில் வந்த கார்த்திக், விஜயகுமார் இருவரும் வெள்ளிக்கிழமை பணம் பெற்றுக்கொள்ளுமாறு மாணிக்கத்திடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மாணிக்கத்தை தொடர்பு கொண்ட அவர்கள், குமுளி தேக்கடி பிரிவிலுள்ள பெட்ரோல் பேங்க் அருகில் பணத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த இடத்துக்கு மாணிக்கம் சென்ற போது, பணம் அடங்கி பெட்டியை அவரது காருக்கு கொண்டு சென்று பூட்டை திறந்து பணத்தை காண்பித்து அவரை நம்பவைத்த பின் பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்டனர்.பின்பு மாணிக்கத்திடம் கமிஷன் தொகை ரூ பத்து லட்சத்தையும், இருபத்தி இரண்டு நிரப்பப்படாத செக்குகளையும் பெற்றுக்கொண்ட இருவரும், அருகிலுள்ள ஹோட்டலில் தங்களது சாட்டர்டு அக்கவுண்டு உள்ளதாகவும் அவரை அழைத்து வருவதாகவும் கூறி சென்றுள்ளனர்.
சுமார் அரைமணி நேரமாக இருவரும் வராததால் அவர்களது செல்போனுக்கு மாணிக்கம் அழைத்துள்ளார். போன் சுட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மாணிக்கம் பெட்டியுடன் குமுளி போலீஸ்டேசன் சென்று நடந்தவற்றை கூறி உள்ளார். குமுளி சார்பு ஆய்வாளர் ஜோசப் தலைமையில் போலீஸார பெட்டியின் பூட்டை உடைத்து பார்த்தபோதுதான் மாணிக்கம் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது.
பெட்டியில் ஒரு தனியார் வங்கியின் சீல் பதித்த காட்டன் துணியில் ரூபாய் நோட்டுகள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. பெட்டியின் மேல்புறம் இரண்டு வரிசைகளாக 22 கட்டுகள் வைக்கப் பட்டிருந்தது. இதில் மேல்புறம் வைக்கப்பட்டிருந்த நோட்டுகள் மட்டுமே உண்மையானவை, அடியில் உள்ளதெல்லாம் அதே அளவு வெட்டப்பட்டிருந்த காகிதங்களும், கீழே தெர்மாக்கோல் சீட்டும், செங்கல்லும் இருப்பது தெரிய வந்தது. ரூபாய் 22 ஆயிரத்தைக்கொடுத்து ரூ 10 லட்சத்தை ஏமாற்றிச்சென்ற மோசடி தமிழக-கேரள எல்லை குமுளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோசடி குறித்து குமுளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...