கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. அன்பழகன் துவக்கினார்

உப்பளம் தொகுதியில் ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணியை ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2015, 8:53 am

சுஜித்குமார்

உப்பளம் தொகுதியில் ரூ.1 கோடி செலவில் சாலை மேம்பாட்டுப் பணியை ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கடலூர் சாலையையும், சுப்பையா சாலையையும் இணைக்கும் டாக்டர் அம்பேத்கர் சாலை பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.ஒரு கோடி செலவில் மேம்படுத்தும் பணி ந டக்கிறது.

இதற்கான பூமி பூஜை விழா அவ்வை நகர் சந்திப்பில் நடந்தது. அன்பழகன்  எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ்நாதன், உதவி பொறியாளர் ஜெயகாந்தன்,  இளநிலை பொறியாளர் வேதாச்சலம், தொகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்க  தலைவர் சின்னதுரை,

செயலாளர் பாப்புசாமி, மகளிரணி அந்தோணியம்மாள், பவானி,  கருணாநிதி, அன்பழகன் உடையார், ரெலிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இச்சாலைப் பணிகள் 6 மாதத்தில் நிறைவடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.