அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கல்வித்துறை அலுவலகப் பணியார்கள் சங்க முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா, சனிக்கிழமை ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2015, 8:43 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா, சனிக்கிழமை ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட நிர்வாகம் அமைத்தல், புதிய உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா, மாவட்ட நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மீ.அழகுமலை தலைமை தாங்கினார்.

கல்வி மாவட்டச் செயலாளர் ரா.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்டக் கல்வி அலுவலக உதவியாளர் மு.வெங்கடாச்சலம் வரவேற்றார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக மு.வெங்கடாச்சலம், செயலாளராக பாண்டுரங்கன், பொருளாளராக தாரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டக் கல்வி அலுவலக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மு.அசன் அலி, பள்ளித் துணை ஆய்வாளர் ஜி.பி.சின்னவீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.