கடலூர் வெள்ள பாதிப்பு: அரிமா சங்கம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து நிவாரண உதவி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை ஸ்ரீவில்லிபுத்தூர்


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் மற்றும் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் செய்து வருகிறார்கள்.
இரண்டாம் தவணையாக ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களுடன் மூன்று லாரிகள் சென்றன. இத்துடன் 6 சமையல் மாஸ்டர்கள், 5 அரிமா சங்க உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடலூர் சென்று, தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமத்தில் இரு நாட்கள் தங்கியிருந்து நிவாரண உதவிகளை செய்து வருவார்கள் என அரிமா சங்க்ததின் தலைவர் ஆர்.பி.ரஞ்சித் கூறினார்.
நிவாரணப் பொருட்கள் அடங்கிய பையில் 10 கிகி அரிசி, சர்க்கரை, புடவை, வேஷ்டி, சட்டை, நைட்டி, லுங்கி, துண்டு, பாய், வலி நிவாரணி, கொசுவர்த்தி, நாப்கின், பிஸ்கட், பிரட், ஜாம், பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டு, பென்சில், பேனா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.
மொத்தம் 320 பண்டல்கள் நிவாரணப் பொருட்கள் இரண்டாம் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கார்த்திக், எஸ்.குணசேகரன், கு.சக்திவேல், எம்.கே.முகமது மைதீன், குலாம் சையத், வி.ஆர்.எஸ்.செந்தில், அரவிந்த், பள்ளி முதல்வர் சுதாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...