தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்டத்தில் 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2.50 கோடிக்கு உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,49,53,383-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,49,53,383-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு கட்டட வளாகம், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ரா.தாரணி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கே.சிங்கராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.வசந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி எஸ்.பத்மநாபன், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.பசும்பொன் சண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.நம்பிராஜ் ஆகியோர் முன்னியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் முதுநிலை நிர்வாக அதிகாரி பேச்சியப்பன் வரவேற்றார்.நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நில எடுப்பு வழக்குகள், சிவில் வழக்குகள், பிறப்பு இறப்பு வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட இதர வழக்குகள் என 11911 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இதில் 11081 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2,49,53,383-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வங்கிகளில் நிலுவையில் உள்ள வராக்கடன்கள் மனுக்கள் 4851 பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 420 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.3,33,45,160-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதில் ரூ.49,02,085 உடனே வசூல் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை நீதிமன்ற முதன்மை நிர்வாக அதிகாரி ரவீந்திரன், மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாரர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் மைக்கேல்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...