புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முற்றுகை: அமைச்சக ஊழியர்கள் 15 பேர் பணியிடை நீக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட அமைச்சக ஊழியர்கள் 15 பேருக்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட அமைச்சக ஊழியர்கள் 15 பேருக்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள சூப்பிரெண்டு மற்றும் உதவியாளர் பணிகளை முதுநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்ப வேண்டும். நேரடி நியமனம் செய்யக்கூடாது. காலகட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழிய ர்கள் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போ ராட்டம் நடத்தியவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து தரையில் அமர்ந்து அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.சார்பு செயலாளரைச் சந்தித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர் லட்சுமிநாராயணன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள் 15 பேருக்கு சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சார்பு செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணிகளை நிரப்ப வலியுறுத்தியும் வருகிற 4-ம் தேதி(புதன்கிழமை) ஒட்டுமொத்தமாக அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...