மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தங்க பிஸ்கெட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி

தங்க பிஸ்கெட் வாங்கித்தருவதாகக்கூறி இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த இருபெண்கள் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2015, 7:40 am

தங்க பிஸ்கெட் வாங்கித்தருவதாகக்கூறி இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த இருபெண்கள் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்தவர் போத்திராஜா(36). இவரிடம் கடந்த ஆண்டு அக்.18-ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த லீலாவதி, ரவிக்குமார், நதியா ஆகியோர் கரூரில் தொழில் அதிபர் ஒருவரிடம் தங்க பிஸ்கெட் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலையில் வாங்கித்தருவதாகவும் கூறி மூன்று தவணையாக ரூ.25 லட்சம் பெற்றுள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு நவ,13-ம் தேதி மற்றும் 23-ம் தேதி போத்திராஜாவை அழைத்துக்கொண்டு கரூரில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர்கள், தங்க பிஸ்கட் வாங்கி கொடுக்கவில்லையாம். இதனால் தன்னிடம் தங்க பிஸ்கட் வாங்கித்தருவதாக மோசடி செய்துவிட்டனர் என போத்திராஜ் திங்கள்கிழமை கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து லீலாவதி உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.