/

பழனி நகரில் உள்ள பிளாஸ்டிக் கேரிப்பை கழிவுகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

பழனியில் பிளாஸ்டிக் கேரிப்பைகளை பொதுமக்களும், பக்தர்களும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தாலும் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள்

News image
Updated On :5 பிப்ரவரி 2015, 11:59 am

என்.​ அங்​கு​பாபு

பழனி நகரில் தைப்பூசத் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நிறைவுபெறும் நிலையில் நகரில் உள்ள பிளாஸ்டிக் கேரிப்பை கழிவுகளை பிரித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனியில் பிளாஸ்டிக் கேரிப்பைகளை பொதுமக்களும், பக்தர்களும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தாலும் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் பூஜைப்பொருட்களையும், உணவுப்பொருட்களையும் கேரிப்பைகளிலேயே கொண்டு வந்திருந்தனர். இவற்றை ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை வழிநெடுக வீசி சென்றுள்ளனர். இதனால் ரோட்டோர வயல்வெளிகளிலும், வேலிகளிலும் இந்த கேரிப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு தொங்கியவாறு உள்ளது.  இவை வயல்பரப்பில் விழும்போது மட்காமலும், மண்ணின் கீழே சென்று தண்ணீர் மற்றும் காற்று செல்லாதவாறும் தடுத்து மண் வளத்தையும், நீர்சேகரிப்புத் தன்மையையும் கெடுப்பதாக உள்ளது.  இவற்றை அந்தந்த ஊர் ஊராட்சி நிர்வாகம் சேகரித்து அழித்தால் நிலவளத்தை காக்க ஏதுவாகும்.  இதே போல பழனி அடிவாரம், நகர் பகுதிகளிலும் ஏராளமான பிளாஸ்டிக் கேரிப்பை கழிவுகள் உள்ளன. இவற்றை தனியே பிரித்து அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நகராட்சி நிர்வாகம் இவற்றை அப்படியே உரக்கிடங்கில் கொட்டும்போது அவை காற்றில் பரவி பெரியப்பாநகர், சத்யாநகர், கோதைமங்கலம் போன்ற பகுதிகளுக்கு சென்று வீடுகளிலும், மாடிகளிலும் விரவி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   ஆகவே, நகராட்சி நிர்வாகம் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை தனியே பிரித்து பரவாமல் தடுத்து அழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.