ரூ.85 கோடிக்கு வெள்ளை அறிக்கை கோரி ரயில்வே மக்கள் பணி சங்கம் தீர்மானம்
பழனி முதல் ஈரோடு வரையிலான 91 கிலோ மீட்டர் ரயில்வே திட்டத்துக்கு ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில்வே மக்கள் பணிச்சங்கம் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் சார்பின்றி போராடி


பழனியில் நடைபெற்ற ரயில்வே மக்கள் பணி சங்கத்தில் பழனி-ஈரோடு ரயில் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.85 கோடி நிதிக்கான வரவு-செலவு குறித்த வெள்ளை அறிக்கை கேட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி முதல் ஈரோடு வரையிலான 91 கிலோ மீட்டர் ரயில்வே திட்டத்துக்கு ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில்வே மக்கள் பணிச்சங்கம் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் சார்பின்றி போராடி வருகிறது. இத்திட்டம் இலாபகரமான திட்டம் என ரயில்வே துறை தீர்மானம் செய்து ஆய்வுக்குழுவால் பரிந்துரை செய்து 3 முறை நிலம் கையகப்படுத்துவது குறித்த தர்வேயும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரூ.85 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தென்னகரயில்வே இப்பணியை மிகவும் மந்தமாக மேற்கொண்டு வருகிறது.பழனிக்கு வருடம் தோறும் பல இலட்சம் பக்தர்கள் வரும் நிலையில் இத்திட்டத்தை வரும் நிதிநிலை அறிக்கையில் சேர்த்து பட்ஜெட் நிதி ஒதுக்க வலியுறுத்தி ரயில்வே மக்கள் பணிச்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பழனி சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தார். சங்க பொதுசெயலாளர் லிங்கம் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். மயில்சாமி வரவேற்புரை வழங்கினார்.
கூட்டத்தில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் ரூ.100 கோடியாவது ஒதுக்க வேண்டி வலியுறுத்தவும், ரயில்வேதுறை மற்றும் பிரதமர் மோடிக்கு ரயில்வே பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் தபால்கார்டுகளை டெல்லிக்கு அனுப்பவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவிர கடந்த 2008ம் ஆண்டு பழனியில் பூமிபூஜை போட்ட நிலையில் 2010-2012க்கு இடைப்பட்ட ஆண்டில் சர்வே பணிக்காக ஒதுக்கிய ரூ.85 கோடிக்கு வெள்ளை அறிக்கை கோரவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும்,இத்திட்டத்தை உடனடியாக கையிலெடுக்க வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நேரில் மனுக்கொடுக்கவும் தீர்மானம் செய்யப்பட்டது.கூட்டத்தில் காந்தி மார்க்கெட் நாகேஸ்வரன், ஷாகுல்ஹமீது, ராஜலிங்கம், பச்சமுத்து, மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...