ஜெயலலிதா முதல்வராக வேண்டி ஆட்டோவில் பிரச்சாரம்
பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக பிரமாண்ட வெற்றி பெற வேண்டியும் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில்


பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக பிரமாண்ட வெற்றி பெற வேண்டியும் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் பழனி முதல் ஸ்ரீரங்கம் வரை ஆட்டோ பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் தொடர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட இணை செயலாளர் ஆட்டோ காளிமுத்து மற்றும் உறுப்பினர்கள் மக்களின் முதல்வர் அம்மா மீண்டும் அரியணை ஏறவும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக பிரமாண்ட வெற்றி பெறவும் அருள்மிகு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பழனி அடிவாரம் பாதவினாயகர் கோயில் முதல் திருச்சி ஸ்ரீரங்கம் வரை ஆட்டோவில் பிரச்சாரம் மேற்கொண்டனர். நகர துணை செயலாளர் வாய்க்கர்சாமி தலைமையில் பாதவினாயகர் கோயில் முன்பு ஆட்டோவிற்கு பூஜைகள் செய்து பிரச்சாரம் துவங்கியது. வழிநெடுக அம்மா ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி நோட்டீசுகள் வழங்கியும், ஸ்ரீரங்கத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தியும் பிரச்சாரத்தை நிறைவு செய்வதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...