பழனி பேருந்து நிலைய குப்பைத்தொட்டியில் பிறப்புச்சான்றிதழ்கள்
பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் அரசு உத்திரவின்படி மருத்துவமனைகளிலும், அங்கு பெற தவறியவர்களுக்கு


பழனி பேருந்து நிலையம் சுகாதாதார அலுவலர் அலுவலகம் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் அரசு உத்திரவின்படி மருத்துவமனைகளிலும், அங்கு பெற தவறியவர்களுக்கு நகராட்சி சுகாதார அலுவலகத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. சிலநேரம் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முன்பு சான்றிதழ் பெறுவோர் மீண்டும் அதற்கான பணத்தை நகராட்சி கருவூலத்தில் கட்டி பெயருடன் கூடிய சான்றிதழ்களை பெறுகின்றனர். பழனி பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி சுகாதார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகே நகராட்சி குப்பைத்தொட்டி வண்டி உள்ளது.
இதில் செவ்வாய்க்கிழமை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் லேமினேசன் செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமானிடம் கேட்டபோது, நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பிறந்தஉடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிலசமயம் குழந்தைகளுக்கு பெயர் வைத்தபின் அவர்கள் பெயருடன் கூடிய சான்றிதழ்களை வாங்குவார்கள். அப்போது பழைய சான்றிதழ் அவர்களிடம் பெறப்படும். அப்படி பெறப்பட்ட சான்றிதழ்கள் பின்னாளில் அழிக்கப்பட்டு விடும் என தெரிவித்தார். ஆனால், அவை எப்படி குப்பைத்தொட்டிக்கு வந்தது என தெரியவில்லை என்றார். நகராட்சி குப்பைத்தொட்டியில் இருந்த நான்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஒரு இறப்புசான்றிதழில் பெயர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சான்றிதழ்கள் தேவையற்ற நபர்கள் கையில் கிடைத்தால் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் எப்படி கவனிக்காமல் போட்டனர் என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...