/

பழனிக்கோயில் தைப்பூச உண்டியல் காணிக்கை:   இரு நாள் எண்ணிக்கையில் மூன்றரைக் கோடியை நெருங்கியது

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16  நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி என இருநாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  மொத்த எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் மூன்றரைக் கோடியை நெருங்கியது.

News image
Updated On :13 பிப்ரவரி 2015, 2:52 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16  நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி என இருநாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  மொத்த எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் மூன்றரைக் கோடியை நெருங்கியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது.  இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  இருநாட்கள்  எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் மூன்று கோடியே 44 இலட்சத்து 6  ஆயிரத்து 667 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன குடம், வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 839 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 891 கிராமும் கிடைத்தன.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 533 ம் வரப்பெற்றன. 

இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றும்(வெள்ளிக்கிழமை) உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது. உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.